புகை பிடித்தவர்களிடம் அபராதம் வசூல்

புகை பிடித்தவர்களிடம் அபராதம் வசூல்

பேருந்து நிலையம் 

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின்படி நேற்று மாநகர் நல அலுவலர் பரிதாவாணி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் பேருந்து நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின்படி நேற்று மாநகர் நல அலுவலர் பரிதாவாணி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் பேருந்து நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் புகைபிடித்த 5 நபர்களுக்கு தலா ரூ.100 வீதம் ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல் திண்டுக்கல் சிலுவத்தூர் சாலையில் உள்ள தனியார் பள்ளிகளின் அருகில் செயல்படும் கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்திய போது 2 கடைகளில் பீடி, சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அக்கடைகளில் இருந்த ரூ.7 ஆயிரம் மதிப்பிலான பீடி, சிகரெட் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, அதன் உரிமையாளர்களுக்கு தலா ரூ.500 வீதம் ரூ.1000 அபராதம் வித்தனர்.

Tags

Next Story