நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவர்களிடம் அமைச்சர் கடிதம் சேகரிப்பு
விழுப்புரம் மாவட்ட தி.மு.க. மருத்துவரணி சார்பில் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி எதிரே நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி நடைபெற்ற கடிதம் சேகரிப்பு நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் புக ழந்தி எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். லட்சுமணன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட மருத்து வரணி அமைப்பாளர் டாக்டர் காவியவேந்தன், ஒன்றியக்குழு தலைவர் சங்கீத அரசி ரவிதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு மருத் துவக்கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோ ரிடம் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கையெழுத்திட்ட கடிதம் சேகரிப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார், இதில் ஒன்றிய செயலாளர்கள் ரவிதுரை, ஜெயபால், நகர செயலாளர் நைனாமுகமது, பேரூராட்சி தலைவர் அப்துல் சலாம், துணை தலைவர் பாலாஜி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன், துணை செயலாளர் இளந்திரையன், வட்ட கவுன்சிலர் மீனா வெங் கடேசன், ஒன்றிய கவுன்சிலர்கள் இளவரசி, செல்வம், சாவித்திரி, செந்தில்குமார், தொழில் நுட்ப அணி அன்பரசன் மற்றும் கட்சி நிர் வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
Next Story