குமரக்கோட்டம் திருக்கோயில் உண்டியலில் ரூ 23.60 லட்சம் காணிக்கை வசூல்
குமரக்கோட்டம் திருக்கோயில் உண்டியலில் ரூ 23.60 லட்சம் காணிக்கை வசூல்
கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் கந்தபுராணம் அரங்கேற்றிய தளமாக விளங்கும் ஸ்ரீ அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மேற்கு ராஜ வீதியில் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு கந்த சஷ்டி செவ்வாய்க்கிழமைகள் தைப்பூசம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெறுவது வழக்கம். மேலும் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்த திருக்கோயில் வளாகத்தில் 8 உண்டியல்கள் இந்து சமய அறநிலை துறை சார்பில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று இந்து சமய அறநிலையத்துறை உத்தரவின் பேரில் திருக்கோயில் வளாகத்தில் செயல் அலுவலர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. உண்டியல் என்னும் பணியில் தனியார் கலைக் கல்லூரி மாணவர்கள் சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டு காலை 11 மணியளவில் துவங்கி, மாலை 4 மணி அளவில் நிறைவுபெற்றது. காணிக்கை பெறப்பட்டது குறித்து இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் தியாகராஜன் வெளியிட்ட செய்தி குறிப்பில் , ரூபாய் 23 லட்சத்து 60 ஆயிரத்து 938 மதிப்பிலான ரூபாய் நோட்டுகளும் , முப்பத்தி ஆறு கிராம் தங்கமும் , 78 கிராம் வெள்ளி பொருட்களாகவும் பக்தர்களால் காணிக்கையாக பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியின் போது இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் கிரித்திகா சிவகாஞ்சி காவல் துணை ஆய்வாளர் வஜ்ரவேலு உள்ளிட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.