அங்காள பரமேஸ்வரியம்மன் கோவிலில் ரூ.27 லட்சம் உண்டியல் காணிக்கை

X
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு பக்தர்கள் உண்டியல்களில் செலுத்தும் காணிக்கையை மாதந்தோறும் எண்ணுவது வழக்கம். அதன்படி நேற்று இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் மேல்மலையனூர் ஜீவானந்தம், விழுப்புரம் துணை ஆணையர் சிவலிங்கம், செஞ்சி ஆய்வர் சங்கீதா, அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார் பூசாரி ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. இதில் 27 லட்சத்து ஆயிரத்து 917 ரூபாய் ரொக்கமும், 70 கிராம் தங்க நகைகளும், 240 கிராம் வெள்ளிப் பொருட்களும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின் அறங்காவலர்கள் தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி, சந்தானம் பூசாரி மற்றும் கோவில் பணி யாளர்கள், இந்தியன் வங்கி ஊழியர்கள் ஆகியோர் உடனிருந்தனர். வளத்தி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Tags
Next Story
