கோடை வெயிலில் இருந்து தற்காத்துகொள்ள ஆட்சியர் அறிவுரை

கோடை வெயிலில் இருந்து தற்காத்துகொள்ள ஆட்சியர் அறிவுரை

திருப்பூர் மாவட்ட ஆட்சியர்

திருப்பூர் மாவட்டத்தில் கோடை வெயில் தொடக்கத்திலேயே அதிக வெப்பநிலையோடு இருந்து வருவதால் பொதுமக்கள் கவனமாக இருந்திட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் திருப்பூர் மாவட்டத்தில் கோடை வெயில் தொடக்கத்திலேயே அதிக வெப்பநிலையோடு வருவதால் பொதுமக்கள் கவனமாக இருந்திட பின்பற்ற வேண்டிய தற்காப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளார். அதன் அடிப்படையில் பொதுமக்கள் தங்கள் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் எனவும் , பயணத்தின் போது குடிநீரை கையோடு எடுத்துச் செல்ல வேண்டும் , ஓ ஆர் எஸ் எலுமிச்சை ஜூஸ் இளநீர் மோர் மற்றும் பழச்சாறுகள் பருகி நீர் இழப்பை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மதிய நேரத்தில் வெளியே செல்லும்போது குடை கொண்டு செல்ல வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அதேபோல் மழலை பள்ளிகளை கோடை காலம் முடியும் வரை செயல்படுத்த வேண்டாம் எனவும் , முதியவர்கள் 100 நாள் பணியின் போது நண்பகல் 12 மணிக்கு மேல் பணி செய்யாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதன் காரணமாக கூரை வீடுகள் எளிதில் தீப்பிடிக்கும் வாய்ப்பு இருப்பதால் தக்க பாதுகாப்புடன் இருக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

Tags

Next Story