வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் செய்ய ஆட்சியர் அறிவுரை

வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் செய்ய ஆட்சியர் அறிவுரை

ஆட்சியர் அறிவுரை

கிள்ளியூர் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டு மண்டல அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி கன்னியா குமரிநாடாளுமன்ற பொதுத் தேர்தல் மற்றும் விளவங் கோடு சட்டமன்ற இடைத் தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுவதையொட்டி தேர்தல் நடத்துவதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் முழுவீச்சில் நடை பெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் நேற்று கன்னியா குமரி நாடாளுமன்றத்திற்குஉட்பட்ட கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் வாக்களிக்க உள்ள வாக்குச்சாவடி களில் பணியாற்றும் மண்டல அலுவலர்களுக்கு கிள்ளியூர் தாலுகா அலுவலக கூட்ட அரங்கில் பல்வேறு ஆலோச னைகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:கன்னியாகுமரி நாடாளு மன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்ட மன்ற இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி வாக் குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மண்டல அலுவலர்களை கொண்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கையாள்வது,

குறிப்பிட்ட நேரத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு கொண்டுசென்று அந்த எந்திரங்கள் சரியாக இயங்குகிறதா என்பதை சோதனை செய்வது, வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான அனைத்து அடிப்படை வச திகளும் மேற்கொள்ளப்பட் டுள்ளதா என்பது குறித்து மண்டல அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ளவேண்டும்.மேலும் வாக்குச்சாவடிகளுக்கு தேவையான அனைத்து படிவங்களும் உள்ளதா என்பதை சரிபார்ப் பது, மாற்றுத்திறன் வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடிகளில் சாய்வுதளம் அமைக் கப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும்.

மின்னணு வாக்குப்பதிவு எந் திரங்களுக்கு தேவையான மின்கலம் (பேட்டரி) உள்ளதா என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும் என ஆட்சியர் ஸ்ரீதர் கூறினார்.

Tags

Next Story