ரேஷன் கடையை திறந்து வைத்த ஆட்சியர் மற்றும் எம்.எல்.ஏ
ரேஷன் கடையை திறந்து வைத்த ஆட்சியர் மற்றும் எம்.எல்.ஏ
மணக்கால் கிராமத்தில் ரேஷன்கடை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரியலூர் எம்எல்ஏ கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தனர்.
அரியலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணக்கால் கிராமத்தில் புதிய நியாவிலை கடையின் கட்டிடத்தினை திறந்து வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா மற்றும் அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தனர். பின்னர் பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு துறை, வட்ட வழங்கல் துறை உள்ளிட்ட அரசுதுறை அதிகாரிகள் மற்றும் திமுக, மதிமுகவை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story