அனுமதி இன்றி பிரச்சாரம் செய்தால் கடும் நடவடிக்கை ஆட்சியர் அறிவிப்பு
பைல் படம்
இந்திய நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியான மார்ச் மாதம் 16-ந்தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் பொதுமக்களும் தேர்தல் நடத்தை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
பாலக்கோடு வட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெலமாரனஅள்ளி மற்றும் அமானி மல்லாபுரம் பகுதிகளில் அனுமதியின்றி தேர்தல் பிரசாரம் செய்தது தொடர்பாக மாரண்டஅள்ளி போலீஸ் நிலையத்தில் பறக்கும் படை அலுவலரால் புகார் தெரிவிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அரசி யல் கட்சியினர் அனுமதி பெற்ற நேரம் மற்றும் இடங்களில் மட்டுமே பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். உரிய அனுமதியின்றி பிரசாரம் மேற்கொள்ளும் பட்சத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.