திருப்பூர் மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை தடுக்க ஆட்சியர் வேண்டுகோள்
மாவட்ட ஆட்சியர்
திருப்பூர் மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை தடுக்க பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, பொதுமக்களுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
குழந்தை திருமணம் செய்வுத சட்டப்படி குற்றமாகும். பெண்ணிற்கு 18 வயதிற்கு முன்பும், ஆணிற்கு 21 வயதிற்கு முன்பும் நடத்தப்படும் திருமணம் "குழந்தை திருமணம் ஆகும். பொதுமக்கள் அனைவரும் குழந்தை திருமணத்தை தடுக்க அரசுக்கு ஒத்துழைப்பு நல்கி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். குழந்தை திருமணத்தால் இளம் வயதில் கருத்தரித்தல்,
கருச்சிதைவு, ரத்தசோகை, எடை குறைவாக குழந்தை பிறத்தல், மனவளர்ச்சி குன்றிய குழந்தை பிறத்தல், தாய் மற்றும் சேய் ஆகிய அபாயங்கள் உள்ளது.மேலும், குழந்தை திருமண தடைச் சட்டம் 2006 ன் படி, குழந்தை திருமணம் நடத்தியவர்கள், குழந்தை திருமணம் நடத்த தூண்டியவர்கள் மற்றும் குழந்தை திருமணங்களில் கலந்து கொள்பவர்கள் குற்றவாளி ஆவார்கள்.
இக்குற்றம் புரிந்தவர்களுக்கு ரூ.1 லட்சம்- அபராதம் அல்லது இரண்டு வருட கடுங்காவல் தண்டணை அல்லது இரண்டும் சேர்த்து தண்டணையாக விதிக்கப்படும். மேலும், திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து திருமண மண்டபங்கள் மற்றும் திருக்கோவில்களில் திருமணம் நடத்த முன்பதிவு செய்ய வருபவர்களிடம் மணமகன் மற்றும் மணமகள் ஆகியோரின் ஆதார் அட்டை மூலம் பிறந்ததேதி,
நிரந்திர முகவரி ஆகியவற்றை உறுதி செய்த பின்னரேதிருமணத்தை நடத்த ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. மேலும் பொதுமக்கள் அனைவரும் குழந்தை திருமணத்தை தடுக்க அரசுக்கு ஒத்துழைப்பு நல்கி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஆகவே குழந்தை திருமணங்கள் நடைபெறுவது தெரிந்தால் உடனடியாக கீழ் தெரிவித்துள்ளவாறு புகார் தெரிவிக்கலாம் அவ்வாறு புகார் தருபவர்களின் பெயர்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்.
திருப்பூர் மாவட்ட கலெக்டர், மாவட்ட சமூக நலஅலுவலர், அறை எண்.36 மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், திருப்பூர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புஅலுவலர் அறை எண்.705 கலெக்டர் அலுவலகம், சைல்டு லைன் 1098 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். மேலும், பெண்கள் உதவி மையம் கொள்ளவும். 181 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்.
பஞ்சாயத்து தலைவர் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து குழுவினரிடம் தெரிவிக்க வேண்டும். சமூக நலவிரிவாக்க அலுவலர் / ஊர்நல அலுவலர். அங்கன்வாடி பணியாளர்கள், தலைமையாசிரியர், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர், பஞ்சாயத்துவார்டுஉறுப்பினர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரிடம் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.