தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர்களுக்கு ஆட்சியர் அழைப்பு
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்
தேர்தல் பணியில் ஈடுபட விரும்பும் முன்னாள் படைவீரர்கள் ஏப்.18 தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் ஆஜராக வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஏப்.19 அன்று நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணியில் சிறப்பு காவலர்களாக பணியாற்றிட முன்னாள் படைவீரர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இப்பணிக்காக தங்களது பெயர்களை ஏற்கனவே பதிவு செய்துள்ள மற்றும் இப்பணியில் ஈடுபட விரும்பும் முன்னாள் படைவீரர்கள் ஏப்.18 அன்று காலை 8 மணியளவில் தஞ்சாவூர் பழைய நீதிமன்ற சாலையில் உள்ள ஆயுதப் படை மைதானத்திற்கு தங்களது அடையாள அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் நேரில் ஆஜராகுமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
Next Story