சேலம் பெண்கள் சிறையில் கலெக்டர் கார்மேகம் ஆய்வு

சேலம் பெண்கள் சிறையில் கலெக்டர் கார்மேகம் ஆய்வு

சிறையில் ஆய்வு செய்த ஆட்சியர்

சேலம் பெண்கள் சிறையில் கலெக்டர் கார்மேகம் ஆய்வு செய்தார்.

சேலம் கலெக்டர் கார்மேகம் நேற்று சேலம் பெண்கள் தனி கிளை சிறையில் ஆய்வு நடத்தினார். அதன்படி கைதிகள் அடைக்கப்பட்டு உள்ள அறைகளுக்கு சென்று உணவு சரியாக வழங்கப்படுகிறதா? என்று கேட்டறிந்தார். அப்போது அசைவ உணவுகள் வழங்கப்படுகிறதா?

என்று கைதிகளிடம் கேட்டார். பின்னர் கைதிகள் வளாகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் செடிகளை ஆய்வு நடத்தினார். பின்னர் சிறை சூப்பிரண்டு (பொறுப்பு) வினோத், பெண்கள் சிறை சூப்பிரண்டு கீதா ஆகியோரிடம் ஆண்கள், பெண்கள் சிறையில் எத்தனை கைதிகள் உள்ளனர். அவர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறதா? என்ற விவரங்களை கேட்டறிந்தார்.

Tags

Next Story