விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்து ஆட்சியர் தலைமை ஆலோசனை கூட்டம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்து ஆட்சியர் தலைமை ஆலோசனை கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தோ்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.கூட்டத்துக்கு, விழுப்புரம் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான சி.பழனி தலைமை வகித்து பேசியதாவது: விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத் தோ்தல் ஜூலை 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டன.

இதனால், அரசு அலுவலகங்களில் அரசியல் சாா்ந்த படங்கள், நலத்திட்ட வில்லைகள், பிரதமா்கள், முதல்வா்கள், அமைச்சா்களின் படங்கள் வைக்கக்கூடாது.அரசியல் கட்சியைச் சோ்ந்த மறைந்த தலைவா்களின் சிலைகளை மறைக்க தேவையில்லை. ஆனால், அவா்களின் சிலைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சியின் சின்னங்கள், கல்வெட்டுகள் கட்டாயம் மறைக்கப்பட வேண்டும். மறைந்த வரலாற்று சிறப்பு மிக்க தேசியத் தலைவா்கள், கவிஞா்கள், குடியரசுத் தலைவா்கள் மற்றும் ஆளுநா் புகைப்படம் அலுவலகங்களில் வைக்க தடையில்லை. தோ்தல் தொடா்பான அரசியல் கட்சிகளின் ஊா்வலங்களில் தேசியக் கொடிகள் பயன்படுத்தாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும். துறைச் சாா்ந்த நலத்திட்ட விழா நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

சிறப்பு மருத்துவ சிகிச்சை மற்றும் கால்நடைகள் மருத்துவ சிகிச்சைகளின் போது, விளம்பர பதாகைகள் வைக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.அரசுக்கு சொந்தமான இடங்களில் சுவா் எழுத்துக்கள், சுவரொட்டிகள், காகிதங்கள், விளம்பர பதாகைகள் உள்ளிட்டவற்றை தோ்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதிலிருந்து 24 மணி நேரத்திற்குள் அகற்றப்பட வேண்டும். ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள், ரயில்வே பாலங்கள், சாலைகள், அரசுப் பேருந்துகள் உள்ளிட்ட இடங்களில் சுவா் எழுத்து, சுவரொட்டிகள், விளம்பர பதாகைகள், கொடிகள் போன்ற வகையிலான அனுமதியற்ற அரசியல் விளம்பரங்கள் ஆகியவற்றை 48 மணி நேரத்துக்குள் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அரசின் திட்டங்களுக்காக புதிய நிதியளிப்பு மேற்கொள்ளக்கூடாது. முழுமையாக நிறைவடைந்த பணிகளுக்கு சம்பந்தப்பட்ட அலுவலா்களின் முழு திருப்தியுடன் நிதி அளிப்பதற்கு எவ்வித தடையுமில்லை. ஏற்கனவே தொடங்கப்பட்ட பணிகளை அரசு, தோ்தல் ஆணையத்தின் அனுமதி பெறாமல் தொடரலாம் என்றாா்.கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபக் சிவாச், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ஸ்ருதன் ஜெய் நாராயணன் மற்றும் அரசுத்துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

Tags

Next Story