ஜவ்வாது மலையில் கள ஆய்வில் மேற்கொண்ட ஆட்சியர்

ஜவ்வாது மலையில் கள ஆய்வில் மேற்கொண்ட ஆட்சியர்

ஆய்வில் மாவட்ட ஆட்சியர்


திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை பகுதியில் தரமற்ற சாலையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை புதூர் நாடு அடுத்த புங்கம்பட்டு ஊராட்சியில் சுமார் 16குக் கிராமங்கள் உள்ளன. இந்த 16 கிராமங்களுக்கு செல்ல புதூர் நாட்டிலிருந்து தொடங்கி கடைசி ஊரான கம்பக்குடி வரை தொலைவினால சாலைகள் குண்டும் குழியமாக உள்ளன.

இந்த நிலையில் கொத்தனூர் பகுதியில் உள்ள சாலைகள் மிகவும் சீர்கெட்டு குண்டும் குழியுமாக உள்ளன இதனால் அவ்வப்போது விபத்துக்கள் நடைபெறுவதாலும் தார் சாலை அமைக்க கோரி மனு கொடுத்தும் அப்பகுதியில் மக்கள் பலமுறை அரசு பேருந்தை சிறைபிடித்தும் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் கொத்தானூர் பகுதியை சேர்ந்த ராகுல் என்ற கல்லூரி மாணவர் கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி பயின்று வருகிறார்.

இந்த நிலையில் இந்த குண்டும் குழியுமாக உள்ள சாலையில் செல்லும் பொழுது கீழே விழுந்து கால் உடைந்து இரண்டு மாதத்திற்கு மேலாக சிகிச்சையை பெற்று வருகிறார். மேலும் தன்னை நம்பி தான் என்னுடைய குடும்பமே இருந்தது போலீஸ் வேலைக்கு செல்லலாம் என இருந்தேன் தற்போது என்னுடைய கால் உடைந்து விட்டதால் என்னுடைய கனவு வீணாகிவிட்டது எனவும் ஆதங்கம் தெரிவித்தார்.

உடனடியாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் மற்றும் ஊரக வளர்ச்சி துறையினர் வனத்துறையினர் மற்றும் துறையை சேர்ந்த அதிகாரிகள் ஜவ்வாது மலை புதூர்நாடு பகுதியில் உள்ள தார் சாலை மற்றும் மண் சாலைகளை கள ஆய்வில் மேற்கொண்டு உடனடியாக சாலை வசதிகளை செய்து தர வலியுறுத்தினார்

Tags

Next Story