தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் கலெக்டர் திடீர் ஆய்வு
தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் கலெக்டர் திடீர் ஆய்வு
மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. தேர்தல் தொடர்பாக புகார் தெரிவிக்க வசதியாக நாகர்கோவில் உள்ள குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட எஸ்பி அலுவலகம் ஆகியவற்றில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள 1050 என்ற எண் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 599 8010 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாட்டு அறைகள் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கலெக்டர் அலுவலக தேர்தல் கட்டுப்பாட்டறையில் கலெக்டர் ஸ்ரீதர் நேற்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது அவர் அங்குள்ள புகார் பதிவேடுகளை பார்வையிட்டார். அதிலிருந்த பணியாளர்கள் நேற்று முன்தினம் ஐந்து புகார்கள் பதிவானதாகவும், இதில் நான்கு புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.