மதுராந்தகம் சுற்றியுள்ள பகுதிகளில் கலெக்டர் திடீர் ஆய்வு

மதுராந்தகம் சுற்றியுள்ள பகுதிகளில் கலெக்டர் திடீர் ஆய்வு
மதுராந்தகம் சுற்றியுள்ள பகுதிகளில் கலெக்டர் திடீர் ஆய்வு
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சுற்றி உள்ள பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சிபணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சுற்றி உள்ள பகுதிகளில் நடைபெறும் பணியினை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அருண்ராஜ் ஆய்வு மேற்கொண்டார். மதுராந்தகம் படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஆலையின் உற்பத்தி திறன் மற்றும் ஆலை நிர்வாகிகளிடம் மற்றும் விவசாயிகளிடம் குறை என கேட்டறிந்தார்.

அதுபோல மதுராந்தகம் ஏரி தூர்வார பல ஆண்டுகளாக பொதுமக்கள் வேண்டுகோள் வைத்திருந்த நிலையில் தற்போது அரசு 120 கோடி ரூபாய் ஒதுக்கி அதற்கான பணியை கடந்த 10 மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்பொழுது பொது பணி துறை அதிகாரிகள் ஏரியின் வேலை 80 சதவீதம் முடிந்து விட்டதாகவும்,இன்னும் 20 சதவீதம் மிக விரைவில் முடிக்கப்படும் எனவும் கூறியிருந்தனர்.இதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் இன்னும் இரண்டு மாதத்திற்குள் பணியினை விரைந்து முழுமையாக முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். அது போல மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் திடீரென ஆய்வில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர் நோயாளிகளிடம் மருத்துவர்கள் பணியினை குறித்தும், பொது மக்களுக்கு தேவையானது குறித்தும் கேட்டறிந்தார். அவருடன் பல துறையை சேர்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story