தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஆட்சியர் திடீர் ஆய்வு

தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஆட்சியர் திடீர் ஆய்வு

ஆட்சியர் கலைச்செல்வி

காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்த தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் கலைச்செல்வி, புகார்கள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்த தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் கலைச்செல்வி , .புகார்கள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் மூன்றாவது மாடியில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் கட்டுப்பாட்டுறை மற்றும் காணொளி காட்சி கண்காணிப்புக்குழு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரும் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அலுவலருமான கலைச் செல்வி இன்று தேர்தல் கட்டுப்பாட்டு அறையை திடீர் ஆய்வு மேற்கொண்டார். தேர்தல் புகார்கள் பதிவுகள் குறித்து கேட்டறிந்து அதில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதையும் அங்கு பணிபுரிந்த அலுவலர்கள் ஆட்சியருக்கு விளக்கினர். மேலும் புகார்கள் பதிவு செய்யப்படும் கணினி செயலியையும் ஆய்வு செய்து பல்வேறு அறிவுரைகள் வழங்கினர். இதனைத் தொடர்ந்து காணொளி கண்காணிப்புக்குழு மேற்கொண்ட நடவடிக்கைகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் தேர்தல் குறித்த விவரங்களை பதிவு செய்யும் விவரங்கள் உள்ளிட்டவைகளையும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story