நாமக்கல்லில் +2 பொது தேர்வு மையங்களில் கலெக்டர் ஆய்வு !

நாமக்கல் மாவட்டத்தில்,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றுள்ள நிலையில் தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
நாமக்கல் மாவட்டத்தில், இன்று 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை 17,411 மாணவ- மாணவிகள் எழுதுகின்றனர். நாமக்கல் தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு. தமிழ்நாடு முழுவதும் 12-ம் வகுப்பு பொது தேர்வு இன்று முதல் (01.03.2024) தொடங்கி நடைபெறுகிறது. இதன்படி, நாமக்கல் மாவட்டத்தில்,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு 85 மையங்களில் நடைபெறுகிறது. 8,479 மாணவர்கள், 8,932 மாணவிகள் என மொத்தம் 17,411 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.மேலும் 286 தனித் தேர்வர்களுக்கு 5 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளி மாணவர்கள் 112 பேரில் 94 மாணவர்களுக்கு சொல்வதை எழுதுபவர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேல்நிலைப் பொதுச் தேர்வுக்கு 85 முதன்மை கண்காணிப்பாளர்கள், 85 துறை அலுவலர்கள், 3 கூடுதல் துறை அலுவலர்கள்,163 பறக்கும் பறக்கும் படையினர் தேர்வை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் (தெற்கு) அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் ச.உமா பார்வையிட்டார். தேர்வு எழுதும் மாணவ- மாணவிகளுக்கு உரிய வசதிகள் செய்து தரப்பட்டுள்ளனவா என்றும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். மேலும், தேர்வு மையங்களை பார்வையிட நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் தேர்வு மையங்களை பார்வையிட்டு வருகின்றனர்.மாவட்ட ஆட்சியர் உடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர்கள் பாலசுப்ரமணி, கணேசன், ரவிசெல்வம் உள்ளிட்டோர்,தேர்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தேர்வு நடைபெறும் மையங்களில் கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. தேர்வுக்காக, பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் ராஜேந்திரன், தேர்வு கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags

Next Story