தேர்தல் விளம்பர ஒளிபரப்புகள் கண்காணிப்பு பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்

தருமபுரியில் ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழு மையத்தில் நாடாளுமன்றத் தேர்தல் குறித்த விளம்பர ஒளிபரப்புகள் கண்காணிக்கும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பல்நோக்கு கட்டிடத்தில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் -2024 முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழு மையத்தில் தேர்தல் குறித்த விளம்பரங்கள் ஒளிபரப்புகள் கண்காணிக்கும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, இ.ஆ.ப. அவர்கள் இன்று (19.03.2024) நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் .சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது:- மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பல்நோக்கு கட்டிடத்தில் 24x7 மணிநேரம் செயல்படும் வகையில் ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழு மையம் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.மேலும், ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழு மையத்தில் 24 மணி நேரமும் கண்காணிக்க சுழற்சி முறையில் மூன்று குழுக்கள் அமைத்து கண்காணித்து வருகிறது என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி, இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்தார்.இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பிரகாசம், தனி வட்டாட்சியர் (தேர்தல்) அ. அசோக்குமார்,மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.செண்பகவள்ளி உடனிருந்தனர்.

Tags

Next Story