பறக்கும் படை சோதனையை ஆட்சியர் ஆய்வு!

திருவண்ணாமலையில் பறக்கும் படையினர் சோதனை செய்வதை மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி முள்ளிப்பட்டு பகுதியில் பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். பறக்கும் படையினர் சோதனை செய்வதை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் இன்று (01.04.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story