மின்னணு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணியினை ஆட்சியர் ஆய்வு

மின்னணு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணியினை ஆட்சியர் ஆய்வு

ஆட்சியர் ஆய்வு மேற்கொண்ட போது

திருப்பத்தூர் வருவாய் கோட்டச்சியர் அலுவலகத்தில் மின்னணு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணியினை ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பத்தூர் தொகுதி மற்றும் ஜோலார்பேட்டை தொகுதிக்குட்பட்ட வருவாய் அலுவலகத்தில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் மற்றும் வேட்பாளர்களின் பெயர்கள் பொருத்தும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுதர்ப்பகராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் வருவாய் கோட்டாட்சியர் இராஜசேகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் இராஜராஜன், சம்பந்தப்பட்ட பொறுப்பு அலுவலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story