மாற்றுத்திறனாளிகள் தினம் - நலத்திட்ட உதவிகள் வழங்கினார் ஆட்சியர்

மாற்றுத்திறனாளிகள் தினம் - நலத்திட்ட உதவிகள் வழங்கினார் ஆட்சியர்
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, 30 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3,27,000/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் வழங்கினார்.
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு 30 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் மாதம், 3-ஆம் நாள் அனைத்து நாடுகளிலும் அனுசரிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாத்து, அவர்கள் சுயமரியாதையுடன் சமுதாயத்தில் இணைந்து வாழ நாம் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டிய அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ள உரிமைகள் மற்றும் பாதுகாப்புகள் தொடர்பான விழிப்புணர்வினை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ள உரிமைகள் மற்றும் பாதுகாப்புகள் தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, விலையில்லா மோட்டர் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம், மாற்றுத்திறனாளி ஏழைப் பெண்களுக்கு தலா 8 கிராம் தங்க நாணயங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக, இன்று 30 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.10,200/- மதிப்பில் சக்கர நாற்காலிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.10,800/- மதிப்பில் மூன்று சக்கர மிதிவண்டிகள் என மொத்தம் ரூ.3,27,000/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் வழங்கினார்.

Tags

Next Story