தருமபுரியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளரிடம் சான்றிதழ் வழங்கிய ஆட்சியர்

தருமபுரியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளரிடம் சான்றிதழ் வழங்கிய ஆட்சியர்

சான்றிதழ் வழங்கல் 

தர்மபுரி தொகுதியில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் பாமணி வெற்றி பெற்றதையடுத்து அவருக்கு மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் வழங்கினார்.

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் இன்று ஜூன் 4 இன்று செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடைபெற்றது தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியை பொருத்தவரை வாக்கு எண்ணிக்கை என்பது மொத்தம் 23 சுற்றுகளாக நடைபெற்றது.

இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றது திமுக கூட்டணி வேட்பாளர் ஆ.மணி மொத்தம் 432667 வாக்குகளும், அதிமுக கூட்டணி வேட்பாளர் அசோகன் 293629 வாக்குகளும் ,பாஜக கூட்டணி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி 411367 வாக்குகளும்,

நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா 65381 வாக்குகளும் பெற்றனர். 21,300 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ஆ மணி வெற்றி பெற்றார்.

அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி அவர்கள் வெற்றி பெற்ற சான்றிதழை ஆ. மணியிடம் வழங்கினார். உடன் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மாவட்ட கழக செயலாளர் தடங்கம் சுப்பிரமணி பழனியப்பன் நகர கழக செயலாளர் நாட்டான் மாது கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story