மனு கொடுத்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு ஆட்சியர் உடனடி தீர்வு

மனு கொடுத்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு ஆட்சியர் உடனடி தீர்வு

மனு அளித்த பெண் 

வீல் சேர் வழங்க கோரி பட்டதாரி மாற்றுத்திறனாளி பெண் மனு கொடுத்த நிலையில் அவருக்கு உடனடியாக வீல் சேரை வழங்கி ஆட்சியர் தர்பகராஜ் நடவடிக்கை மேற்கொண்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த வெலக்கல்நாத்தம் கிட்டப்பையனூர் பகுதியைச் சேர்ந்த கனகராஜ் மகள் மாலதி (25) இவர் எம்சி பயோடெக்னாலஜி படிப்பு முடித்துவிட்டு வீட்டில் உள்ளார் இந்த நிலையில் இவருக்கு தசை சிதைவு நோய் ஏற்பட்டு கால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் சில வருடங்களாக அவதி உற்ற மாணவி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை மற்றும் உதவித்தொகை மற்றும் வீல் சேர வேண்டுமென மனு அளித்தார். மனுவை பெற்று 10 வது நிமிடத்தில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மாணவிக்கு வீல் சேர் வழங்கினார். வீல்சேரை பெற்றுக் கொண்ட மாணவி மாவட்ட ஆட்சிக்கு கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்தார்.

Tags

Next Story