பழங்குடியினர் பள்ளியில் அடிப்படை வசதிகள் - கலெக்டர் துவக்கி வைத்தார்.

X
மாவட்ட ஆட்சியர் மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார்
கன்னியாகுமரி மாவட்ட மலையோர கிராமமான மணலோடையில் அரசு பழங்குடியின உண்டு, உறைவிட உயர்நிலைப்பள்ளி செயல்படுகிறது. அங்குள்ள மாணவ, மாணவியர்களின் வசதிக்காக, மாவட்ட வனத்துறையின் அகஸ்திய மலை உயிர்கூடி காப்பான் திட்டத்தின்கீழ் ரூ.1 இலட்சம் மதிப்பில் எழுதுபலகை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை வழங்கி, துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீதர் துவக்கி வைத்தார். தொடர்ந்து மாணவ மாணவிகளுடன் கலெக்டர் கலந்துரையாடினார். நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் இளையராஜா, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் எச்.ஆர்.கௌசிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தனி மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ரேவதி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கனகராஜ், தனி வட்டாட்சியர் (ஆதி திராவிடர் நலத்துறை) கோலப்பன், திருவட்டார் வட்டாட்சியர் புரந்தரதாஸ் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
Next Story
