தூத்துக்குடி ஆட்சிரகத்தில் குடிநீர் பந்தலை திறந்து வைத்த ஆட்சியர்
தண்ணீர் பந்தலை திறந்து வைத்த ஆட்சியர்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் கோடை வெயில் இருந்து தாகத்தை தணித்துக் கொள்ள அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலை மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமிபதி திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க மற்றும் பல்வேறு பணிகளுக்காக வரும் பொது மக்களின் தாகம் தீர்ப்பதற்காக தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தண்ணீர் பந்தலை இன்று காலை மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி திறந்து வைத்தார் உடன் கூடுதல் ஆட்சித் தலைவர் ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு மோர் மற்றும் பல வகைகளை வழங்கினார்
Next Story