டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 பயிற்சி வகுப்புகளை துவக்கி வாய்த்த ஆட்சியர்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் -2 தேர்விற்கான ஒருங்கிணைந்த குறுகியகால அடிப்படை பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2327 காலிப்பணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி-2 தேர்வு வரும் 14.07.2024 அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தால் ஒருங்கிணைந்த குறுகிய கால அடிப்படை பயிற்சி வகுப்புகள் 01.07.2024 முதல் 05.07.2024 வரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், சூலக்கரையில் நடைபெறுகிறது.

இவ்வகுப்புகள் திறன் வாய்ந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்படுகிறது. இக்குறுகிய கால அடிப்படை பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு இத்தேர்வுக்கு தேவையான பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்கப்படுகிறது. அதன்படி, இந்த குரூப் -2 தேர்விற்கான ஒருங்கிணைந்த குறுகியகால அடிப்படை பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆடசித்தலைவர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெய சீலன் தெரிவித்ததாவது: போட்டித் தேர்வு என்பது பயிற்சி பெற்றவர்களுக்கும், மற்றவர்களுக்குமான ஒரு போட்டியாகும். வெற்றி பெற்றவர்களுக்கும், வெற்றி பெறாதவர்களுக்கும் இடையில் உழைப்பு, படிப்பு ஆகியவற்றில் பெரியதாக வேறுபாடுகள் இருக்காது. ஆனால் அவர்கள் பெற்றிருக்கக் கூடிய மதிப்பெண்களில் சிறு இடைவெளி தான் இருக்கின்றன. ஆனால் அதில் வெற்றி பெற்றவர்களுக்கு உள்ள தனித்தன்மை என்ன என்று எடுத்து பார்த்தால், சில நுணுக்கங்களை அவர்கள் கற்றுக் கொண்டிருப்பார்கள். அந்த நுணுக்கங்களை கற்றுக் கொள்ளவில்லை என்றால் மறுபடியும் அந்த தேர்வு எழுதுவதற்கு ஓராண்டு ஆகிவிடும்.

இதனால் கால தாமதமாகும். கல்லூரி படித்தவர்களில் அவர்களுடைய மிக முக்கியமான வாழ்க்கை காலகட்டத்தில் ஓராண்டு என்பது மிகவும் முக்கியமானதாகும். சில நேரங்களில் அடுத்து அதற்காக தயார் செய்வதற்கான வாய்ப்பு இல்லாமல் கூட போகலாம். அதனால் தான் எந்த ஒரு இது மாதிரியான சிறப்பு வேலைக்கு சென்றாலும் ஒரு உயர் கல்வி நிறுவனத்தில் சேர வேண்டும் என்றாலும், போட்டித் தேர்வுகள் தயார் செய்யக்கூடிய மாணவர்களுக்கு பயிற்சி மிக முக்கியமானது. விளையாட்டு, படிப்பு என எந்த ஒரு போட்டிக்கும் சிறப்பான நுணுக்கங்கள் இருக்கும். அந்த நுணுக்கங்களை தாங்களாகவே தவறுகள் மூலம் கற்றுக் கொண்டு, தேர்ச்சி பெறுவதற்கு காலம் ஆகும்.

அதற்கான கால விரையத்தை குறைக்க வேண்டும். இந்த பயிற்சியின் மூலம் நுணுக்கங்களை கற்றுக்கொள்ள வேண்டும். இப்பயிற்சிகள் மூலம் கவனக் குறைவு, தவறுகளை தவிர்த்தல் போன்றவைகள் பற்றி பயிற்சி அளிக்கும் போது அவர்கள் நல்ல முறையாக தேர்வு எழுத முடியும் என்பதற்கான தான் இந்த பயிற்சி. பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும், கல்லூரி முடித்து போட்டித் தேர்வுக்கு படிக்கும் மாணவர்களுக்கும் நான் முதல்வன் என்ற முக்கியமான திட்டத்தின் கீழ் பல்வேறு பயிற்சிகளை தமிழ்நாடு அரசு வழங்குகிறது. அதில் குறிப்பாக இத்திட்டத்தில் போட்டித் தேர்வுக்கு என்று தனி ஒரு அமைப்பு மூலமாக நான் முதல்வன் போட்டி தேர்வு பிரிவில் நிறைய பயிற்சிகள் வழங்குகின்றார்கள். இந்தியா முழுவதும் டிஎன்பிசி மூலம் வருடத்திற்கு சுமார் 15 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.

அதே போல இந்தியா முழுவதும் ஏறத்தாழ 2 இலட்சம் வேலை வாய்ப்புகள் ரயில்வே, எஸ்.எஸ்.சி, வங்கி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றன. இதில் தமிழ்நாட்டை சார்ந்த மாணவர்கள் நிறைய பேர் ஆங்கிலம் கணிதம் கடினமாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். இந்த இடைவெளியை நாம் நீக்க வேண்டும் என்ற நோக்கில் இணையதள பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக தமிழ்நாடு அரசினுடைய வேலைவாய்ப்பு பயிற்சித்துறை, நான் முதல்வன் இணையதளம், அண்ணா பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் ஆகியவற்றின் இணையதளம் மற்றும் யூ-டியூப் மூலம் நடத்தப்படும் 20 மணி நேர ஆங்கிலம், திறனறிவு உள்ளிட்ட வகுப்புகளில் பயிற்சி செய்யும் போது நீங்கள் நிறைய கற்றுக் கொள்ளலாம். அதில் நீங்கள் அதிகமான வினாக்களுக்கு பதில் அளிக்கக் கூடிய அளவிற்கு இந்த பயிற்சிகள் உங்களுக்கு உதவி செய்யும். இன்றைக்கு நிறைய பேர் கடந்த ஆண்டு வெற்றி பெற்ற மாணவர்களை பார்க்கும்போது, முழுக்க இணைய வழியில் பயிற்சி செய்து இணைய வழியில் மாதிரி வினாத்தாள்களை எடுத்து அதில் முறையாக பயிற்சி எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஆகையால் இதன் மூலமாக மூலமாக தெரிந்து கொள்ள வேண்டியது முறையாக நீங்கள் பயிற்சி பெற்று, அந்த பயிற்சியில் வழங்கக்கூடிய நுணுக்கங்கள் அடிப்படையில் கடினமாக உழைத்தால் நிச்சயமாக போட்டி தேர்வுகளில் வெற்றி பெற முடியும் என தெரிவித்தார். மேலும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் கடந்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் -2 தேர்விற்காக நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெற்று, தேர்வான 3 நபர்கள் பணி ஆணையினை மாவட்ட ஆடசித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்ச்சியில் இக்குறுகிய கால அடிப்படை பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு இத்தேர்வுக்கு தேவையான இலவச பாடக்குறிப்புகளை மாவட்ட ஆடசித்தலைவர் ஜெயசீலன் வழங்கினார்.

Tags

Next Story