வாக்காளர்களுக்கு தகவல் சீட்டு வழங்கப்பட உள்ளதாக ஆட்சியர் தகவல் 

வாக்காளர்களுக்கு தகவல் சீட்டு வழங்கப்பட உள்ளதாக ஆட்சியர் தகவல் 

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு தகவல் சீட்டு வழங்கப்பட உள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு மக்களவை பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நாளுக்கு, ஐந்து நாட்கள் முன்பு வரை அனைத்து வாக்காளர்களுக்கும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

2024 ஆம் ஆண்டு மக்களவை பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு எதிர்வரும் 19.04.2024 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் வரிசை எண்ணை அறிந்து கொள்வதற்காக வாக்காளர் தகவல் சீட்டை (Voter Information Slip) அச்சிட்டு வழங்க இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட எட்டு (8) சட்டமன்ற தொகுதிகளிலும் 01.04.2024 முதல் 13.04.2024 வரை அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் தகவல் சீட்டு (Voter Information Slip) அந்தந்த வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக விநியோகிக்கப்பட உள்ளது.

வாக்காளர் தகவல் சீட்டில் சட்டமன்றத் தொகுதியின் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண், பாகம் எண், வாக்குச்சாவடியின் பெயர், வாக்குப்பதிவு நாள், நேரம் போன்றவை இடம் பெற்றிருக்கும். மேலும், வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடியில் வாக்காளர் தகவல் சீட்டு (Voter Information Slip), அடையாளத்தை மெய்ப்பிப்பதற்கான ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படாது எனவும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story