பள்ளியில் நடைபெற்ற தூய்மை பணிகளை ஆட்சியர் ஆய்வு
எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி
எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டத்தின் தொடர் நிகழ்வாக வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை அரசு பள்ளிகளிலும் சிறப்பு பள்ளி தூய்மைப்பணி ஜனவரி 9 , 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் மேற்கொள்ளபடவுள்ளது.
அதன் அடிப்படையில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டத்தின் கீழ் வேலூர் அருகே கொணவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தூய்மை பணி நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியன், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் மாவட்டத்திலுள்ள அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி தூய்மை பணியினை சிறப்பான முறையில் எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் செயல்படுத்தி தங்களது பள்ளிகள் தூய்மை பெற்று மிளிரும் பள்ளிகளாக மாற்றிக் காட்டப்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும் இச்சிறப்பு பள்ளி தூய்மை பணியினை பள்ளி தலைமை ஆசிரியர் , ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு , முன்னாள் மாணவர்கள் , உள்ளாட்சி பிரதிநிதிகள் , தன்னார்வலர்கள் மற்றும் பிற துறைகளுடன் இணைந்து தூய்மை பணியினை மேற்கொள்ள வேண்டும் எனவும், பிற துறைகளான ஊரக வளர்ச்சித்துறை, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆகிய துறைகளில் இருந்து இச்சிறப்பு தூய்மை பணிக்கான தேவையான பணியாளர்களை பெற்று தூய்மை பணியில் மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆட்சியர் தெரிவித்தார்.