விக்கிரவாண்டி அருகே இல்லம்தேடி கல்வி மையத்தில் கலெக்டர் ஆய்வு

விக்கிரவாண்டி அருகே இல்லம்தேடி கல்வி மையத்தில் கலெக்டர் ஆய்வு
விக்கிரவாண்டி அருகே இல்லம்தேடிகல்வி மையத்தில் கலெக்டர் ஆய்வு
விக்கிரவாண்டி அருகே இல்லம்தேடி கல்வி மையத்தில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றியம் பனையபுரம் ஊராட்சியில் இல்லம்தேடி கல்வி திட்ட மையத்திற்கு கலெக்டர் பழனி வருகை தந்து, ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாணவர்களிடம் ஆங்கில எழுத்து அட்டைகளை கொடுத்து, அவர்களை வாசிக்க வைத்தார்.

பின்னர், அதற்கான விளக்கங்களையும் அவர் கேட்டறிந்தார். அப்போது, மாணவர்கள் உரிய முறையில் பதில் கூறியதற்கு அவர் பாராட்டுகளை தெரிவித்தார். மேலும், ஆசிரியர், தன்னார்வலர்கள், மாணவர்கள் ஆகியோர்களுக்கு ஆலோசனைகளை கூறினார்.

இதைத்தொடர்ந்து, புதிய பாரத எழுத்தறிவு திட்ட மையத்தை யும் ஆய்வு செய்தார். இங்கு எழுதப்படிக்க தெரியாத முதியவர்க ளுக்கு அடிப்படையான எழுத்தறிவு குறித்து தன்னார்வலர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு சிறந்த முறையில் பயிற்சி அளித்துவருபவர்களை கலெக்டர் பழனி பாராட்டினார். ஆய்வின் போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், உதவி திட்ட அலுவலர் தனவேல், வட்டார கல்வி அலுவலர் ஜெயசங்கர், புதிய பாரத எழுத்தறிவு திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், இல்லம் தேடி கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ ழகன், கமலக்கண்ணன், பள்ளி தலைமை ஆசிரியர் உமா, ஆசிரி யர் பயிற்றுனர் ஆனி, ஆசிரியர்கள் தெய்வசிகாமணி, சந்திரலேகா, செல்வி, சசிகலா, ஷகிலா மற்றும் தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story