நெல் கொள்முதல் நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு

நெல் கொள்முதல் நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு

ஆட்சியர் ஆய்வு 

ராமநாதபுரம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே பாரனூர் கிராமத்தில் திறக்கப்பட்ட அரசு நெல் கொள்முதல் நிலையத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் பாரனூர் கிராமத்தில் திறக்கப்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு எடை அளவு இயந்திரத்தை பார்வையிட்டு, விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லின் தரம் குறித்து பார்வை விட்டதுடன் அங்கிருந்த விவசாயிகளிடம் கொள்முதல் நிலையத்தின் மூலம் பெறக்கூடிய பயன்கள் குறித்து தெரிவிக்கையில், மாவட்டத்தில் 100 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க திட்டமிட்டு தற்பொழுது 70 நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது எனவும் இதுவரை விவசாயிகளிடமிருந்து 350 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.இந்த ஆண்டு ஒரு இலட்சம் மெட்ரிக் டன் நெல் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது எனக் கூறினார்.

விவசாயிகளைப் பொருத்தவரை உடனடியாக ஆன்லைனில் பதிவு செய்திட வேண்டும் எனவும் பதிவின் அடிப்படையில் விவசாயிகளிடம் கொள்முதல் நிலையங்களில் நெல் பெறப்படுகிறது.அந்தந்த ஊராட்சியில் விவசாயிகளுக்கு ஏதுவாக பதிவு செய்யும் மையம் செயல்பட்டு வருகிறது. விவசாயிகள் நெல் விற்பனை செய்ய எந்த இடைத்தரகர்களும் இன்றி நேரடியாக ஆன்லைனில் பதிவு செய்து, அதனடிப்படையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து பயன் பெற்றிடலாம் எனவே விவசாயிகளின் பயன்பாட்டிற்கேற்ப தங்கள் பகுதிகளிடையே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார்.இந்த ஆய்வில் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் தனுஷ்கோடி , ஆர். எஸ்..மங்கலம் உதவி இயக்குநர் ராஜலெட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story