வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியர் ஆய்வு

நாடாளுமன்ற தேர்தல் – 2024 ஐ முன்னிட்டு வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியர் ச.உமா ஆய்வு

நாடாளுமன்ற தேர்தல் – 2024 ஐ முன்னிட்டு, பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம், வாக்கு எண்ணும் மையம் ஆய்வு, வாக்குச்சாவடி மையங்களில் தேவையான அடிப்படை வசதிகள் குறித்த ஆய்வு, மாற்றுத் திறனாளிகள், முதியோர் போன்ற நபர்களுக்கு வாக்கு சாவடி மையங்களில் தேவையான வசதிகள் போன்ற பல்வேறு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக, பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிந்து அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா நாமக்கல் மாவட்டம், இராமாபுரம்புதூரில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் மோகனூர் ஊராட்சி ஒன்றியம், ஒருவந்தூர் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் அமைக்கப்படவுள்ள வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ் கண்ணன், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் மா.க.சரவணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story