சுங்கான்கடை ரேஷன் கடையில் கலெக்டர்  ஆய்வு

சுங்கான்கடை ரேஷன் கடையில் கலெக்டர்  ஆய்வு

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம், சுங்கான் கடை நியாயவிலைக்கடையினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் சுங்கான் கடை அருகே வீராணசேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் சுங்கான் கடை நியாயவிலைக்கடையினை மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். அப்போது அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்கள் உடனுக்குடன் வழங்கப்படுகிறதா? இருப்புகள் சரியாக உள்ளதா என்பதையும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது கல்குளம் வட்டாட்சியர் முருகன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story