திருப்போரூர் கந்தசாமி கோவிலில் கலெக்டர் ஆய்வு

திருப்போரூர் கந்தசாமி கோவிலில் கலெக்டர் ஆய்வு
திருப்போரூர் கந்தசாமி கோவிலில் கலெக்டர் ஆய்வு
செங்கல்பட்டு மாவட்டம்,திருப்போரூர் கந்தசாமி கோவிலில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருள்மிகு கந்தசாமி திருக்கோவிலில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் ஆய்வு மேற்கொண்டார், கோவிலில் விசேஷ நாட்களில் உள்ளூர் மட்டுமல்லாது வெளியூர்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர் பக்தர்கள் உள்ளே வரும் பாதையில் நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ள கடையை அகற்ற கோரி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் மேலும் புதிய வாகனம் நிறுத்தம் இல்லாததால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் சாலையிலேயே நிறுத்திவிட்டு செல்கின்றனர்.

இதனால் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்து வருகிறது போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் புதியதாக வாகன நிறுத்தம் அமைக்கும் இடத்தினையும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

முதலாவதாக வடக்கு குளக்கரை பகுதியில் ஆய்வு மேற்கொண்டவர், தொடர்ந்து திருவஞ்சாவடி தெருவில் சர்வே எண் 60 ல், 2 ஏக்கரில் உள்ள கோவில் இடத்தில் கூடுதல் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படவுள்ள இடத்தையும் ஆய்வு மேற்கொண்டார்.

அதே போன்று திருவஞ்சாவடி தெருவில் உள்ள நல்லான்செட்டி குளத்தையும் ஆய்வு செய்தார். 3 மாதத்தில் இந்த குளத்தை சீரமைத்து மேம்படுத்த வேண்டும் என பேரூராட்சி நிர்வாகத்திற்கு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து ஶ்ரீ கந்தசாமி திருக்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் சாமி தரிசனம் செய்தார், ஆய்வின்போது செங்கல்பட்டு மாவட்ட சப்-கலெக்டர் நாராயண சர்மா, இந்து சமய அறநிலையத்துறை செங்கல்பட்டு மாவட்ட உதவி ஆணையர் லட்சுமிகாந்த பாரதிதாசன், திருப்போரூர் பேரூராட்சி தலைவர் தேவராஜ், கோவில் செயல்அலுவலர் குமரவேல், கோவில் மேலாளர் சக்திவேல் திருப்போரூர் மண்டல துணை தாசில்தார்கள் கார்த்திக் ரகுநாத், ஜீவிதா உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story