தூத்துக்குடி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு

தூத்துக்குடி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு

ஆட்சியர் ஆய்வு 

வ.உ.சி. அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மக்களவை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தை தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட விளாத்திகுளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம் (தனி), கோவில்பட்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலையொட்டி பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், விவிபேட் ஆகியவை அனைத்தும் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலர்கள் மூலமாக காவல் துறை பாதுகாப்புடன் தூத்துக்குடி வ.உ.சி அரசு பொறியியல் கல்லூரியில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டு உரிய பரிசோதனைகளுக்குப் பின்னர் தேர்தல் பொதுப்பார்வையாளர் திவேஷ் ஷெஹரா, வேட்பாளர் மற்றும் முகவர்களின் முன்னிலையில் தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தலைமையில் சட்டமன்ற தொகுதி வாரியாக காப்பு அறைகளில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு சீலிடப்பட்டுள்ளது.

மேற்படி வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு மத்திய பாதுகாப்புப்படை மற்றும் காவல்துறை மூலமாக மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் மேற்படி வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தினை 24 மணி நேரமும் கண்காணிக்க முழுநேர சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளதுடன் வருவாய்த்துறை அலுவலர்களை நிர்வாக நடுவர்களாக நியமனம் செய்தும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அனைத்து வேட்பாளர்களின் முகவர்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு அறை மூலமாக கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி பாராளுமன்ற பொதுத் தேர்தல் வாக்கு எண்ணும் மையமான வ.உ.சி. அரசு பொறியியல் கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள காப்பு அறை மற்றும் பாதுகாப்பு பணிகளை தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, பார்வையிட்டு பதிவேட்டில் கையெழுத்திட்டு ஆய்வு செய்தார். அப்போது, காவல்துறையினரிடம் சிசிடிவி கேமராக்கள் செயல்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

Tags

Read MoreRead Less
Next Story