வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயல்பாடுகள் கலெக்டர் ஆய்வு
மாவட்ட ஆட்சியர் ஆய்வு
புதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயல்பாடுகள் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, "உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ், புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றியம், நம்பம்பட்டி, 108-கவரப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயல்பாடுகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் செல்வி.கு.சாந்தி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
Next Story