பிச்சாவரம் சுற்றுலா பகுதியில் ஆட்சியர் ஆய்வு
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் வாயிலாக கடலூர் மாவட்டம் பிச்சாவரம் சுற்றுலா மையத்தினை மேம்படுத்தும் வகையில் இந்தியாவின் சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியின் கிளஸ்டர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 14. 07 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் தம்புராஜ் முன்னிலையில், சுற்றுலா துறை முதன்மை செயலாளரும் சுற்றுலா ஆணையருமான காகர்லா உஷா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags
Next Story