குமரி மாவட்ட திருக்கோவில்களில் வளர்ச்சித்திட்ட பணிகள் கலெக்டர் ஆய்வு
கலெக்டர் ஆய்வு
குமரி மாவட்ட திருக்கோவில்களில் வளர்ச்சித்திட்ட பணிகள் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்ட இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயசுவாமி திருக்கோயிலில் அரசுநிதியின் கீழ் ரூ.45.80 இலட்சம் மதிப்பில் கருங்கல் கட்டமைப்புகளை நீரினால் சுத்தம் செய்யும் பணி மற்றும் விமானம் வர்ணம் பூசுதல், ரூ.58 இலட்சம் மதிப்பில் திருக்கோயில் மண்டபம் ஒழுங்கு மாற்றி தட்டோடு பதித்தல், ரூ.1.29 கோடி மதிப்பில் கருங்கல் தளம் அமைத்தல் மற்றும் உபசன்னதி பழுது பராமரிப்பும், உபயதாரர் நிதி ரூ.14.90 இலட்சம் மதிப்பில் ராஜகோபுரம் வெளிப்பக்கம் சுண்ணாம்பு வர்ணம் பூசி புனரமைக்கும் திருப்பணி ஆகியவற்றையும், பொதுநலநிதியின் கீழ் ரூ.34.50 இலட்சம் மதிப்பில் தெப்பக்குளம், ரூ.15.40 இலட்சம் மதிப்பில் பாத்திரக்குளம் திருப்பணிகள் மற்றும் திருக்கோயில் நிதியின் கீழ் ரூ.1.96 கோடி மதிப்பில் திருக்கோயில் இடத்தில் வணிக வளாகம் மற்றும் தங்கும் விடுதி கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.இந்த பணிகளை கலெக்டர் ஸ்ரீதர் இன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டதோடு, கட்டுமான பணிகளின் தரத்தினை கேட்டறிந்தார். அதனைத்தொடர்ந்து நாகர்கோவில் அருள்மிகு நாகராஜா திருக்கோவிலில் வேலைகள் என மொத்தம் ரூ.5.97 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.நடைபெற்ற ஆய்வுகளில் கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாக அறங்காவலர் குழு தலைவர் பிரபா இராமகிருஷ்ணன், இணை இயக்குநர் (இந்துசமய அறநிலையத்துறை) இரத்தினவேல்பாண்டியன், அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
Next Story