கன்னியாகுமரி : வடசேரி பஸ் நிலைய பணிகள் - கலெக்டர் ஆய்வு
வடசேரி பஸ் நிலைய பணிகளை கலெக்டர் ஆய்வு
2 கோடி ரூபாய் செலவில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தார்
குமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தை அழகுபடுத்தும் பணி நடந்து வருகிறது. இந்த பஸ் நிலையத்தின் அருகே ஆம்னி பஸ்களும் இயங்கி வருகிறது இங்கிருந்து. இந்த பஸ் நிலையத்தை 2 கோடி ரூபாயில் அழகு படுத்தும் பணி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டார். உடன் மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த் மோகன், பொறியாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் உதவி பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story