ஓட்டு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ஓட்டு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டை ஓட்டு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

செங்கல்பட்டு மாவட்டம்,குரோம்பேட்டை எம்.ஐ.டி., கல்லுாரியில், ஓட்டு எண்ணும் மையத்தை, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான அருண்ராஜ், நேற்று ஆய்வு செய்தார். ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணும் மையம், சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி., கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில், பல்லாவரம், தாம்பரம் ஆகிய சட்டசபை தொதிகளுக்கு தரைதளத்திலும், மதுரவாயல், அம்பத்துார், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு முதல் தளத்திலும், ஆலந்துார் சட்டசபை தொகுதிக்கு இரண்டாம் தளத்திலும், ஓட்டு எண்ணும் மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

இந்த மையத்தில், ஆறு சட்டசபை தொகுதிகளுக்கான, 12 ஸ்டராங்க் ரூம்களில், 4,874 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், வி.வி.பேட் இயந்திரம் ஆகியவை வைக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டன. அவை, கேமரா வாயிலாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இங்கு, மூன்று அடுக்கு பாதுகாப்பு பணியில், வருவாய்த்துறை, எல்லை பாதுகாப்பு படையினர், போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து, ஓட்டு எண்ணும் மையத்தில், ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான அருண்ராஜ், நேற்று ஆய்வு செய்தார்.

Tags

Read MoreRead Less
Next Story