மிண்ணனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையில் ஆட்சியர் ஆய்வு

மிண்ணனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையில் ஆட்சியர் ஆய்வு

மாவட்ட ஆட்சியர் 

மிண்ணனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையில் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

சிவகங்கை மாவட்டம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையினை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், இன்று (15.12.2023) மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் பார்வையிட்டு காலாண்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி மாவட்டத்தில் உள்ள வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் இன்றைய தினம் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பார்வையிட்டு காலாண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் அலுவலர்களுக்கான பயிற்சிகள் வழங்குவதற்கென, வாக்குபதிவு இயந்திரங்கள் எடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர்களிடம் ஒப்படைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, வருகின்ற 18.12.2023 ஆம் தேதி முதல் வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் சிவகங்கை, மானாமதுரை, காரைக்குடி, திருப்பத்தூர் ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்களிலும், பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்படவுள்ளது.

அதுமட்டுமன்றி, ஊர்திகள் மூலமாகவும் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்கள் எளிதில் பார்த்து அறிந்து கொள்ளும் வகையில் வாக்காளர் பதிவு இயந்திரங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளது. எனவே, பொதுமக்கள் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி வாக்குப் பதிவு இயந்திரங்களில் எவ்வாறு வாக்களிப்பது, மற்றும் தான் யாருக்கு வாக்களித்துள்ளோம் என்ற விபரங்களையும் தெரிந்து கொள்வதற்கு இதனை பயன்படுத்திக் கொண்டு, வருகின்ற தேர்தல் காலங்களில் தங்களது வாக்கு பதிவினை உறுதி செய்துக்கொள்ள பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்

Tags

Next Story