சேலம் : மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் - ஆட்சியர் ஆய்வு

சேலம் : மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் - ஆட்சியர் ஆய்வு

மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை ஆட்சியர் ஆய்வு

சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை ஆட்சியர் ஆய்வு செய்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்டார்

சேலம் , சூரமங்கலம் மண்டலம் வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளி மற்றும் சேலம் ஊராட்சி ஒன்றியம் மல்லமூப்பம்பட்டி ஊராட்சியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. இந்த முகாமை மாவட்ட கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது,மக்களுடன் முதல்வர் திட்ட முகாமானது சேலம் மாவட்டத்தில் கடந்த மாதம் 18-ந் தேதி முதல் வருகிற 6-ந் தேதி வரை 16 வேலை நாட்களில் 142 முகாம்களை நடத்த திட்டமிடப்பட்டு முகாம்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த முகாமை சீரிய முறையில் நடத்திட முகாம் கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் முகாம் பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.

இந்த முகாமில் செயல்படும் இ-சேவை மையங்களில் வழக்கமாக பெறப்படும் சேவைக்கட்டணத்தில் 50 சதவீதம் மட்டும் பெற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த முகாமானது காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரை செயல்பட்டு வருகிறது. இந்த முகாம்களில் பொதுமக்கள் அளித்த மனுக்களின் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தங்கள் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெறும் நாட்களில் முகாமில் ஒருங்கிணைக்கப்படும் 13 துறைகளின் மூலம் வழங்கப்படும் சேவைகளை பெற்று பயனடையலாம். இவ்வாறு கலெக்டர் கார்மேகம் கூறினார்.

Tags

Next Story