தூத்துக்குடியில் மாதிரி வாக்குச் சாவடி
மாதிரி வாக்குசாவடிகள் ஆய்வு
தூத்துக்குடி காமராஜ் கலை கல்லூரியில் பயிற்சிக்காக அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச் சாவடியினை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி பார்வையிட்டார்.
பாராளுமன்ற பொது தேர்தல் 2024 நடைபெற உள்ளதை முன்னிட்டு, தேர்தல் பணியில் (வாக்குச்சாவடி மையத்தில்) ஈடுபடவுள்ள பணியாளர்களுக்கு முதற்கட்ட பயிற்சி நடைபெறும் தூத்துக்குடி காமராஜ் கலை கல்லூரியில் பயிற்சிக்காக அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச் சாவடியினை தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி இன்று (23.03.2024) பார்வையிட்டார். ஆய்வின் போது, தூத்துக்குடி வட்டாட்சியர் பிரபாகரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Next Story