கரம்பக்காடு மயான சாலையின் தரம் குறித்து கலெக்டர் ஆய்வு
புதுக்கோட்டை மாவட்டம், கரம்பக்காடு கிழக்கு குடியிருப்பு முதல் கரம்பக்காடு மயான சாலையின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், சுனையக்காடு ஊராட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ரூ.34.88 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள, கரம்பக்காடு கிழக்கு குடியிருப்பு முதல் கரம்பக்காடு மயான சாலையின் தரம் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா இன்று (14.05.2024) பார்வையிட்டார். உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் பொறி.பரமசிவம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
Next Story