வாக்கு எண்ணும் மையத்தை ஆட்சியர் ஆய்வு

வாக்கு எண்ணும் மையத்தை ஆட்சியர் ஆய்வு

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், எளையம்பாளையம் விவேகானந்தா மகளிர் தொழில்நுட்ப கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணு மையத்தை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

மக்களவைப் பொதுத் தேர்தலை – 2024னை முன்னிட்டு நாமக்கல் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட நாமக்கல், சேந்தமங்கலம், இராசிபுரம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு, சங்ககிரி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்கள் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் தொழில்நுட்ப கல்லூரியில் அமைக்கப்பட உள்ளன.

இந்த மையங்களில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படவுள்ள பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணும் அறை, வேட்பாளர்களின் முகவர்கள், அரசு அலுவலர்கள் சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வருவதற்கான பாதை அமைப்பு, பாதுகாப்பு வசதிகள், செய்தியாளர்களுக்கான அறை, முகவர்கள் மற்றும் காவல் துறையினருக்கான சி.சி.டி.வி (CCTV) அறை, உள்ளே வருவதற்கு மற்றும் வெளியே செல்வதற்கான வழிகள், குடிநீர், கழிப்பறை, மின்சார மற்றும் இணையதளம் உள்ளிட்ட வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுகளில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சே.சுகந்தி (திருச்செங்கோடு), துணை காவல் கண்காணிப்பாளர் பா.ம.இமயவரம்பன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் .அ.தவமணி, துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story