வாக்கு எண்ணும் மையத்தை ஆட்சியர் ஆய்வு !!
கற்பகம்
பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியின் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான கற்பகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெரம்பலூர் பாராளுமன்ற தேர்தல் முடிந்து வாக்கு பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் பெரம்பலூர் சுற்றுச்சாலை பகுதியில் உள்ள ஆதவ்பப்ளிக் பள்ளியில் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் அதற்கான வாக்கு என்னும் மையம் அமைக்கப்பட்டு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன இந்நிலையில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியின் வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையினை ஆய்வு செய்வதற்காகபெரம்பலூர் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான கற்பகம் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது அவர் உள்ளே செல்லும்போது அங்கு வைக்கப்பட்டிருந்த பதிவேட்டில் கையெழுத்திட்டார். மேலும், வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ள அறையினையும் மாவட்ட ஆட்சியமும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கற்பகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.