நாமக்கல்லில் கழிவுகளிலிருந்து நுண் உரம் தயாரிக்கப்பட்டு வருவதை ஆட்சித்தலைவர் ஆய்வு !

நாமக்கல்லில் கழிவுகளிலிருந்து நுண் உரம் தயாரிக்கப்பட்டு வருவதை ஆட்சித்தலைவர் ஆய்வு !

ஆட்சித்தலைவர் ஆய்வு 

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், கொமாரபாளையம் நகராட்சி பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, அவர்கள் பல்வேறு திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். கொமாரபாளையம் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் நுண் உரம் செயலாக்க மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பை தரம் பிரிக்கப்படுவதையும், பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட கழிவுகளிலிருந்து நுண் உரம் தயாரிக்கப்பட்டு வருவதையும் பார்வையிட்டார்.

தொடர்ந்து, கொமாரபாளையத்தில் தீயணைப்பு நிலையம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், பள்ளிபாளையம் நகராட்சி, பெரியார் நகர் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடத்தையும் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Tags

Next Story