சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி கலெக்டர் ஆய்வு

சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி கலெக்டர் ஆய்வு

சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணியை கலெக்டர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகம் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு வகையான மரம் செடி, கொடிகள் உள்ளன. இவற்றுடன் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் சீமை கருவேல மரங்களும் முப்புதர்களும் மண்டியிருந்தன. மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி பகுதிகள் பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக திருத்தியமைக்கப்பட்ட மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு கூட்டம் கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் கடந்த 20 ஆம் தேதி நடந்தது.

இதில் சீமை கருவேல மரங்களை அகற்ற ஊராட்சி அளவிலான ஒருங்கிணைப்பு குழு அமைப்பு பணிகளை மேற்கொள்ள அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் அனைவரும் சீமை கருவேல மரங்களை அகற்ற ஒத்துழைப்பு அளித்து சீமை கருவேல மரங்கள் இல்லாத மாவட்டமாக புதுகை மாற்ற வேண்டும் என்று கலெக்டர் கேட்டுக்கொண்டார்.

இதை தொடர்ந்து புதுக்கோட்டை நகரின் குளங்கள் தூர்வாரும் பணி வேலை கருவைகள் அகற்றும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. கலெக்டர் அலுவலகம் வளாகத்தில் மண்டி கிடக்கும் கருவேல மரங்கள் ஜேசிபி இயந்திரம் மூலமாக அகற்றப்பட்டது.

இந்த பணியை கலெக்டர் மெர்சி ரம்யா பார்வையிட்டார். டிஆர்ஓ ரம்யா தேவி, கனிமவளத்துறை உதவி இயக்குனர் லலிதா, தாசில்தார் பரணி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story