ஒன்றிய அலுவலக கட்டுமானப் பணி - கலெக்டர் ஆய்வு
மாவட்ட ஆட்சியர் ஆய்வு
தியாகதுருவத்தில் நடைபெற்று வரும் ஒன்றிய அலுவலக கட்டிட பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்
தியாகதுருகம் ஒன்றிய அலுவலக கட்டுமானப் பணிகள் குறித்து கலெக்டர் ஷ்ரவன்குமார் நேற்று ஆய்வு செய்தார். தியாகதுருகம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த கட்டடப் பணிகள் திட்டத்தின் கீழ் 3.55 கோடி ரூபாய் மதிப்பில், புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இப்பணியை கலெக்டர் ஷ்ரவன்குமார் ஆய்வு செய்தார். அப்போது, பணியை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களிடம் அறிவுறுத்தினார். தொடர்ந்து ஒன்றிய அலுவலகத்தில் உள்ள பழைய சேதமடைந்த கட்டடங்களை உடனடியாக இடித்து, அகற்ற உத்தரவிட்டார்.
Next Story