தாராபுரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்த ஆட்சியர்

தாராபுரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்த ஆட்சியர்

ஆய்வு செய்த ஆட்சியர் 

ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட காங்கேயம், தாராபுரம் ஆகிய பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட காங்கேயம், தாராபுரம் ஆகிய பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை இருப்பு வைக்கப்பட்டுள்ள அறைகளை திருப்பூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தாராபுரம் அரசு கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட காங்கேயம் தாசில்தார் அலுவலகம், தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய இடங்களில் மின்னணு எந்திரங்கள் இருப்பறைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின்போது தாராபுரம் ஆர்டிஓ செந்தில் அரசன் மற்றும் தாராபுரம் வட்டாட்சியர் கோவிந்தசாமி, காங்கேயம் வட்டாட்சியர் மயில்சாமி, காங்கேயம் துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன், காங்கேயம் வருவாய் ஆய்வாளர் விதுர்வேந்தன் மற்றும் தேர்தல் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story