பாமாயில் வாங்கிக் கொள்ள கலெக்டர் அறிவுறுத்தல்

பாமாயில் வாங்கிக் கொள்ள கலெக்டர் அறிவுறுத்தல்

ரேஷன் கடைகளில் மே மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை வாங்கிக் கொள்ளுமாறு ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.


ரேஷன் கடைகளில் மே மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை வாங்கிக் கொள்ளுமாறு ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.

ரேஷன் கடைகளில் மே மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயில் ரேஷன் கார்டுதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம். கலெக்டர் ஷ்ரவன்குமார் செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 லட்சத்து 35 ஆயிரத்து 871 ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ஒரு கிலோ துவரம் பருப்பு 30 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் பாமாயில் 25 ரூபாய்க்கும் மானிய விலையில் வழங்கப்படுகிறது. லோக்சபா தேர்தல் நன்னடத்தை விதிகள் காரணமாக பாமாயில் மற்றும் துவரம் பருப்புக்கான ஒப்பந்தப்புள்ளிகள் மீதான முடிவுகள் மேற்கொண்டு, பொருட்களை கொள்முதல் செய்வதில் காலதாமதம் நேரிட்டது.

இந்நிலையில், தற்போது மாவட்டத்திற்கு 294 மெட்ரிக் டன் துவரம் பருப்பு மற்றும் 3 லட்சத்து 96 ஆயிரத்து 60 பாமாயில் பாக்கெட்டுகள் ஒப்பந்ததாரர்களி டமிருந்து பெற்று கிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து கார்டுதாரர்கள் கடந்த மே மாத ஒதுகீட்டிற்கான பொருட்களை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மே மாதம் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட் பெற இயலாத ரேஷன் கார்டுதாரர்கள் தற்போது பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story